பருப்பு இல்லாத சாம்பார்

  by  , Sunday 23 September 2012, Categories: Smart Recipe

சமைத்து அசத்த நீங்க ரெடியா? சொல்லித்தர நான் ரெடி !

முதலில் புளி கரைத்து, உப்பு சேர்த்து ஏதேனும் சாம்பார் காய்கள் சிலவற்றை வதக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்

வெந்தயம், வெள்ளை எள்ளு , மிளகாய் வத்தல்தேங்காய் இவை நான்கையும் வறுத்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். (சாம்பார் நன்றாக கெட்டி பட வேண்டும் என்றால் கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ளவும்).

அடுப்பில் கொதிக்கும் புளித்தண்ணீரில் அரைத்து வைத்ததை சேர்த்து கொஞ்சம் பெருங்காயம் (தேவைப்பட்டால்) சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ,

கடுகு , உளுத்தம் பருப்பு , மிளகாய் வத்தல் தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான் பருப்பு இல்லாத சுவையான சாம்பார் தாயார்.

செய்து பாருங்கள், சுவைத்து மகிழுங்கள். அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிறை குறைகளை எழுதி அனுப்புங்க devi@yaazhinee.in

யாழினி தேவி கண்ணன்

This entry was posted by and is filed under Smart Recipe.

Feedback awaiting moderation

This post has 58 feedbacks awaiting moderation...


Form is loading...